/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசு ஊழியர் மறியல் போராட்டம் 60 பெண்கள் உள்பட 75 பேர் கைது அரசு ஊழியர் மறியல் போராட்டம் 60 பெண்கள் உள்பட 75 பேர் கைது
அரசு ஊழியர் மறியல் போராட்டம் 60 பெண்கள் உள்பட 75 பேர் கைது
அரசு ஊழியர் மறியல் போராட்டம் 60 பெண்கள் உள்பட 75 பேர் கைது
அரசு ஊழியர் மறியல் போராட்டம் 60 பெண்கள் உள்பட 75 பேர் கைது
ADDED : ஜூன் 20, 2025 01:05 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிங்கராயர் தலைமை வகித்தார். தி.மு.க.,வின் 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்கும் ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் மற்றும் பஞ்., செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியர், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர், ஓ.எச்.டி., ஆப்ரேட்டர், சுகாதார பணியாளர், காசநோய் ஒழிப்பு பணியாளர்கள் உள்பட பலருக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 60 பெண்கள் உள்பட மொத்தம், 75 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாநில செயலாளர் சங்க பிள்ளை, கமலக்கண்ணி உள்பட பலர் பங்கேற்றனர்.


