/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழாகுளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா
குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா
குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா
குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா
ADDED : ஜூன் 07, 2024 12:03 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., குருவிக்காரன்பட்டி ஜக்கம்மாள், வீரியகாரன்பட்டவன், பள்ள குடும்பன் ஆகிய கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில் மாலை தாண்டும் திருவிழா, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா கடந்த மே, 20ல் காப்பு கட்டி தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள், 15 நாள் விரதம் இருந்து சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் பொங்கல் வைத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நுாற்றுக்கணக்கான காளைகளுடன் வருகை தந்த மந்தையர்களை, நடுப்பள்ளத்தில் கிராம மக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாவது நாள் அன்று மாலை தாண்டும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
மந்தை எதிரே 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு, 200க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு உள்ள எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிேஷகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து கொட்டும் மழையில் மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பொது மக்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.