தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 24, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை :குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், நல்லுாரான்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம், 53; லாரி டிரைவர். கடந்த, 16ல், இவர் வீட்டிற்கு செல்லும் பொது பாதையை, அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம், 65, இவரது மனைவி மல்லிகை, 60, இவர்களது மகன் மணிகண்டன், 35, ஆகியோர் சேர்ந்து பாதையை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து கேட்ட மாணிக்கத்தை, தகாத வார்த்தையில் திட்டி, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணிக்கம், மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதி மற்றும் அவர்களது மகன் மீதுவழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us