/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை பஸ் ஸ்டாண்டில் செயல்படாத 'சிசிடிவி' கேமரா குளித்தலை பஸ் ஸ்டாண்டில் செயல்படாத 'சிசிடிவி' கேமரா
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் செயல்படாத 'சிசிடிவி' கேமரா
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் செயல்படாத 'சிசிடிவி' கேமரா
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் செயல்படாத 'சிசிடிவி' கேமரா
ADDED : ஜூன் 18, 2025 01:38 AM
குளித்தலை, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளது.
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் போலீசார் சார்பில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. வியாபாரிகள், நடத்துனர், டிரைவர், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையிலும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த கேமராக்கள் பழுது ஏற்பட்டு, பயன்பாட்டில் இல்லாத நிலை இருந்து வருகிறது. குளித்தலை காந்தி சிலை மற்றும் கடைவீதி மார்க்கமாக வைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களின் ஒயர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது. போலீசார் சரியாக பராமரிக்காததால், கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளது.
வியாபாரிகள், ஆட்டோ, கார் டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி, முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து, பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.