Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு போட்டி தேர்வு

கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு போட்டி தேர்வு

கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு போட்டி தேர்வு

கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு போட்டி தேர்வு

ADDED : அக் 05, 2025 01:29 AM


Google News
நாமக்கல், 'கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், இன்று (அக்., 5) முதல் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம்' என, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில், நாமக்கல் மண்டலத்தில் காலியாக உள்ள, உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும், 11ல், காலை, 10:00 மணிக்கு போட்டித்தேர்வு நடக்கிறது.

இதற்கான ஹால் டிக்கெட், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களது ஹால் டிக்கெட்டை, இன்று (அக்., 5) முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக விளக்கம் தேவைப்பட்டால், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை, 04286 -28027 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us