/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சட்ட பல்கலைக்கழக நுழைவு தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சட்ட பல்கலைக்கழக நுழைவு தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சட்ட பல்கலைக்கழக நுழைவு தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சட்ட பல்கலைக்கழக நுழைவு தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சட்ட பல்கலைக்கழக நுழைவு தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 10, 2025 12:53 AM
கரூர், தேசிய சட்ட பல்கலை கழகங்களுக்கான, பொது நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.
இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாறுதல், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு, 311 பேர் மனுக்களை அளித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 10 பயனாளிக்கு, 1.2 லட்சம் ரூபாய் மதிப்பில் வங்கிக்கடன் மானியம் மற்றும் உதவி உபகரணங்களையும், தாட்கோ மூலம், நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டத்தின் கீழ், 4 பயனாளிகளுக்கு, 47.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான நில உடமை சான்றிதழ்கள் என மொத்தம், 14 பேருக்கு, 49.22 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
குளித்தலை வட்டம், கோட்டைமேடு அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, தேசிய சட்ட பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விஷ்ணு, அகிலன் ஆகியோரை பாராட்டி, கலெக்டர் புத்தகங்களை வழங்கினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பாலசக்திகங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.