/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை; கரூரில் 58.2மி.மீ., அளவு பதிவுமாவட்டத்தில் தொடர்ந்து கனமழை; கரூரில் 58.2மி.மீ., அளவு பதிவு
மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை; கரூரில் 58.2மி.மீ., அளவு பதிவு
மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை; கரூரில் 58.2மி.மீ., அளவு பதிவு
மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை; கரூரில் 58.2மி.மீ., அளவு பதிவு
ADDED : ஜூன் 07, 2024 12:04 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கரூரில், 58.2 மி.மீ., அளவு பதிவாகி இருக்கிறது.
தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று மாலை கரூரில் கனமழை கொட்டி தீர்த்தது.
நேற்று மாலை, 6:00 மணிக்கு கரூர் நகர், திருகாம்புலியூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்திகிராமம், திருமாநிலையூர், புலியூர், வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்தது. மழை பெய்து ஓய்ந்தவுடன் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல், நேற்று காலை, 8:00 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூரில், 58.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
க. பரமத்தி, 3.4 மி.மீ,, குளித்தலை, 19.6, கிருஷ்ணராயபுரம், 5.6, மாயனுார், 10, பஞ்சபட்டி, 5, கடவூர், 7, பாலவிடுதி, 20, மைலம்பட்டி, 8.6 என மொத்தம், 137.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. சராசரியாக, 11.45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.