Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ADDED : மே 18, 2025 06:33 AM


Google News
கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் நேற்று, நான்காவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனியார் ஒப்-பந்த தொழிலாளர்கள், பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த, 14 காலை கூடுதலாக, ஒரு மணி நேரம் வேலை பார்க்க முடியாது, சம்பளத்துடன் கூடிய வார விடு-முறை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் நடத்திய பேச்சுவார்த்-தைக்கு பிறகு, பெரும்பாலான ஒப்பந்த பணியாளர்கள் வேலைக்கு திரும்பி விட்டனர். ஆனால், 15க்கும் மேற்பட்ட-வர்கள் மட்டும், நேற்று நான்காவது நாளாக கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஒப்பந்த தொழிலாளி சுமதி என்பவரது தலைமையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us