/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 17, 2025 02:07 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சியில் துாய்மை பணியாளர்கள், 35 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை
வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 6:00 மணி முதல் பணிக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர்கள், ஊக்கத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் நடந்தது.
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, அனைத்து தொழிலாளர் உரிமைகளையும் வழங்க வேண்டும். 8.33 சதவீத போனஸ் தொகை வழங்க வேண்டும், 1.67 சதவீத கருணை உதவி தொகையை சேர்த்து போனஸ் உடன் வழங்க வேண்டும், மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி குறைந்த
பட்ச ஊதியம், 769 வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராஜா முகமது, செயலாளர் சுப்பிரமணி, சி.பி.எம்., ஒன்றிய செயலர் ஆறுமுகம், நிர்வாகிகள் காந்தி, முருகன், நாகராஜ், அன்னக்கொடி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார், நகராட்சி அலுவலர்கள் சிலர் போராட்ட குழுவினருடன் பேச்சு
வார்த்தை நடத்தினர்.
முடிவில், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இத்தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


