சேதமடைந்த 'சிக்னல்' விபத்து அபாயம்
சேதமடைந்த 'சிக்னல்' விபத்து அபாயம்
சேதமடைந்த 'சிக்னல்' விபத்து அபாயம்
ADDED : செப் 24, 2025 01:35 AM
கரூர் :கரூர்-திருச்சி சாலை, புலியூரில் தனியாருக்கு சொந்தமான சிமென்ட் ஆலை உள்ளது. மேலும், இப்பகுதியில் உப்பிடமங்கலம் பிரிவு சாலை செல்கிறது. அதில், போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்தை தடுக்கவும், சோலார் சிஸ்டம் உதவியுடன் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது.
ஆனால், அந்த சிக்னல் விளக்கு கம்பம், பல மாதங்களாக சேதமடைந்துள்ளது. விளக்குகள் எரியவில்லை. அதை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்
. இதனால், கரூரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள், உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சரி செய்து, விளக்குகளை எரிய வைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.