/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுகாதார வளாகம் செல்லும் வழி ஆக்கிரமிப்பு; கலெக்டரிடம் மனு சுகாதார வளாகம் செல்லும் வழி ஆக்கிரமிப்பு; கலெக்டரிடம் மனு
சுகாதார வளாகம் செல்லும் வழி ஆக்கிரமிப்பு; கலெக்டரிடம் மனு
சுகாதார வளாகம் செல்லும் வழி ஆக்கிரமிப்பு; கலெக்டரிடம் மனு
சுகாதார வளாகம் செல்லும் வழி ஆக்கிரமிப்பு; கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 17, 2025 01:48 AM
கரூர், புகழூர் தனியார் சர்க்கரை ஆலை அருகில், பொது சுகாதார வளாகம் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
புகழூர் நகராட்சிக்குட்பட்ட, 15வது வார்டில் தனியார் சர்க்கரை ஆலை அருகில், பொது சுகாதார வளாகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு செல்கின்ற வழி, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த வழியை கம்பிவேலி வைத்து மறைத்து விட்டதால், பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து, புகழூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகழூர் வருவாய்த்துறை சார்பில், புகழூர் நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வழித்தடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.