/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2025 02:24 AM
குளித்தலை, மத்திய அரசை கண்டித்து, குளித்தலை அடுத்த, தோகைமலை பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
சங்க ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். செயலாளர் முனியப்பன், அரசு ஊழியர் சங்க தலைவர் பழனி மற்றும் பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பிர
மணியன், கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
இதில், விவசாயிகள் பாசனத்துக்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு, வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தவும் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், விவசாயிகள் தங்களுக்கு தேவையான நீரை பெறுவர் என்றும், பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வரிகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். மததிய அரசின் இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் ஏற்கனவே, கூடுதல் செலவு செய்து சாகுபடி
யில் நஷ்டங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது தண்ணீர் பயன்படுத்துவதற்கு, வரி விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது, கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் பேசினர்.
நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஆண்டி, பாலு, சங்கப்பிள்ளை, ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.