/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பொது இடத்தில் வீச்சு அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நால்வர் கைது பொது இடத்தில் வீச்சு அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நால்வர் கைது
பொது இடத்தில் வீச்சு அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நால்வர் கைது
பொது இடத்தில் வீச்சு அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நால்வர் கைது
பொது இடத்தில் வீச்சு அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நால்வர் கைது
ADDED : ஜூன் 19, 2025 01:53 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, இரும்பூதிபட்டி- சந்தையூர் மேலப்பாதையை சேர்ந்தவர் ஆனந்த், 33, பி.எஸ்.சி., பட்டதாரி. வரகூர் கிராமத்தை சேர்ந்த அரிவாள், கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட இரும்பு ஆயுதங்கள் செய்யும் தொழிலாளி பாபு, 28. இருவரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் காலை, 8:30 மணியளவில் நண்பர் ஆனந்துக்கு தொழிலாளி பாபு வீச்சு அரிவாள் இரண்டு தயாரித்து அவரிடம் கொடுத்துள்ளார். பின், இருவரும் இரும்பூதிபட்டி சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தனர்.
குளித்தலை எஸ்.ஐ.,சரவணகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரையும் பிடித்து கைது செய்து, வீச்சு
அரிவாள்களை பறிமுதல் செய்தனர். பின், குளித்தலை குற்றவியல் நடுவர் எண், 2- நீதிபதி
ஹரிஹரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
இதேபோல் நேற்று காலை 9:00 மணியளவில் உழவர் சந்தை தார்ச்சாலையில். ரயில்வே கேட் டைமண் சிட்டியை சேர்ந்த விமல், 25, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோர் பெரிய வீச்சு அரிவாள்களை கையில் வைத்து, ரகளையில் ஈடுபட்டனர். இவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.