/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அண்ணா நகரில் டவுன் பஸ் நின்று செல்ல வலியுறுத்தல் அண்ணா நகரில் டவுன் பஸ் நின்று செல்ல வலியுறுத்தல்
அண்ணா நகரில் டவுன் பஸ் நின்று செல்ல வலியுறுத்தல்
அண்ணா நகரில் டவுன் பஸ் நின்று செல்ல வலியுறுத்தல்
அண்ணா நகரில் டவுன் பஸ் நின்று செல்ல வலியுறுத்தல்
ADDED : ஜூன் 17, 2025 01:50 AM
குளித்தலை, அண்ணா நகரில் டவுன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளித்தலை அடுத்த, மணப்பாறை நெடுஞ்சாலையில் இரும்பூதிபட்டியில் அண்ணா நகர் உள்ளது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் அய்யர்மலை-2 உதவி பொறியாளர் மின்வாரிய அலுவலகம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள், 700 மீட்டர் தொலைவில் உள்ள இரும்பூதிபட்டி பஸ் நிறுத்தத்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்குமான நிலையே உள்ளது. அண்ணா நகர் பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் முதல் முதியோர் வரை மற்றும் மாற்றுத் திறனாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
டவுன் பஸ்கள், அண்ணா நகரில் நின்று செல்ல வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதி மக்கள், பணியாளர்கள் நலன் கருதி, அண்ணாநகரில் டவுன் பஸ் மட்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.