Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுய வேலை வாய்ப்பு பயிற்சி கரூர் கலெக்டர் அழைப்பு

சுய வேலை வாய்ப்பு பயிற்சி கரூர் கலெக்டர் அழைப்பு

சுய வேலை வாய்ப்பு பயிற்சி கரூர் கலெக்டர் அழைப்பு

சுய வேலை வாய்ப்பு பயிற்சி கரூர் கலெக்டர் அழைப்பு

ADDED : ஜூன் 20, 2025 01:06 AM


Google News
கரூர், கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில், முன்னோடி வங்கிகள் மூலம், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அதில், சென்னை தவிர, 37

மாவட்டங்களிலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பயிற்சி மையங்களில் மொபைல் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இரு சக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட, 64 வகையான

சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல், 18--45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 10 நாட்கள் முதல் அதிகபட்சம், 45 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 191/2, இரண்டாம் தளம், கோவை ரோடு, மதன் கார் டிரேடர்ஸ் அருகில் செயல்பட்டு வருகிறது.

மேலும் விபரங்களுக்கு, 04324 248816, 63795 27550 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us