/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் முப்பெரும் விழா சட்டசபை தேர்தலுக்கு திருப்புமுனையாக அமையும்:அமைச்சர் நேரு கரூர் முப்பெரும் விழா சட்டசபை தேர்தலுக்கு திருப்புமுனையாக அமையும்:அமைச்சர் நேரு
கரூர் முப்பெரும் விழா சட்டசபை தேர்தலுக்கு திருப்புமுனையாக அமையும்:அமைச்சர் நேரு
கரூர் முப்பெரும் விழா சட்டசபை தேர்தலுக்கு திருப்புமுனையாக அமையும்:அமைச்சர் நேரு
கரூர் முப்பெரும் விழா சட்டசபை தேர்தலுக்கு திருப்புமுனையாக அமையும்:அமைச்சர் நேரு
ADDED : செப் 12, 2025 02:12 AM
கரூர், ''கரூரில், தி.மு.க., சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா, வரும் சட்டசபை தேர்தலுக்கு திருப்புமுனையாக அமையும்,'' என, அமைச்சர் நேரு கூறினார்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகில் வரும், 17ம் தேதி தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், முப்பெரும் விழா நடக்கும் மேடை பணிகளை, நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர் அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது: முப்பெரும் விழாவை, மாநாடு போல் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று லட்சம் பேர், விழாவில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது. கரூர் மட்டுமின்றி நாமக்கல், திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழா வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி,
மாணிக்கம், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.