/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 34 வழித்தடத்தில் நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பஸ் சேவை 34 வழித்தடத்தில் நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பஸ் சேவை
34 வழித்தடத்தில் நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பஸ் சேவை
34 வழித்தடத்தில் நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பஸ் சேவை
34 வழித்தடத்தில் நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பஸ் சேவை
ADDED : ஜூன் 17, 2025 02:00 AM
கரூர், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டம் தொடக்க விழா நடந்தது.
இதனை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து கூறியதாவது:
கரூர் பஸ் ஸ்டாண்ட் முதல் மணல்மேடு பிரிவு வரை, வெண்ணமலை கோவில் முதல் கந்தசரப்பட்டி வரை, பஸ் ஸ்டாண்ட் முதல் வரப்பட்டி வரை, மேலப்பாளையம் முதல் அப்பிப்பாளையம் வரை, பஸ் ஸ்டாண்ட் முதல் சமத்துவபுரம் வரை, சாரதா காலேஜ் முதல் தண்ணீர்பந்தல் பிரிவு வரை, வடக்குப் பாளையம் முதல் கொங்கு காலேஜ் வரை, பஸ் ஸ்டாண்ட் முதல் அம்மன் நகர் வரை உள்பட மொத்தம், 34 வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில், கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.