/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தோகைமலை பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி தோகைமலை பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி
தோகைமலை பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி
தோகைமலை பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி
தோகைமலை பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி
ADDED : அக் 02, 2025 01:29 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த, தோகைமலையில் பஞ்., நிர்வாகம் சார்பில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டில், 30க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தின் நடுவில் பயணிகள் நிழற்
கூடமும், நான்கு திசைகளிலும் வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் கட்டண கழிப்பிட வசதியும் உள்ளது.
இங்குள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்துள்ளனர். மேலும் வாடகை வேன்கள் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் பஸ்களில் ஏறவும் இறங்கவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
பொதுமக்கள் மற்றும் பஸ் டிரைவர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாடகை வேன்களை
அப்புறப்படுத்த வேண்டும்.


