/உள்ளூர் செய்திகள்/கரூர்/பராமரிப்பின்றி தொட்டி குடிநீரின்றி மக்கள் அவதிபராமரிப்பின்றி தொட்டி குடிநீரின்றி மக்கள் அவதி
பராமரிப்பின்றி தொட்டி குடிநீரின்றி மக்கள் அவதி
பராமரிப்பின்றி தொட்டி குடிநீரின்றி மக்கள் அவதி
பராமரிப்பின்றி தொட்டி குடிநீரின்றி மக்கள் அவதி
ADDED : ஜூன் 30, 2024 02:01 AM
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை பகுதியில், குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் தொட்டி பராமரிப்பு இன்றி இருப்பதால், மக்கள் குடிநீர் குடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, ஆகிய பஞ்சாயத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய்கள் வழியாக காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றி, குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக, நீர் ஏற்றும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும் தொட்டியில் அதிகமான மண் இருப்பதால், குடிநீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த தண்ணீர் குடிக்கும் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் தொட்டியை பராமரிப்பு செய்து, மக்களுக்கு தரமான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.