/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நொய்யல் ஆற்றுப்பாலத்தில் இருளில் பயணிக்கும் மக்கள் நொய்யல் ஆற்றுப்பாலத்தில் இருளில் பயணிக்கும் மக்கள்
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் இருளில் பயணிக்கும் மக்கள்
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் இருளில் பயணிக்கும் மக்கள்
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் இருளில் பயணிக்கும் மக்கள்
ADDED : செப் 24, 2025 01:39 AM
அரவக்குறிச்சி :பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்விளக்குகள் அமைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கரூரிலிருந்து, ஈரோடு செல்லும் சாலையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக, தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.
இந்த பாலம் அமைத்து பல ஆண்டுகள் ஆகியும், பாலத்தின் மேல் மின் விளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த குறுகிய பாலத்தில், தற்போது வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், பாலம் குறுகிய அளவில் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.