Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பெரிய குளத்தை துார் வார கோரி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

பெரிய குளத்தை துார் வார கோரி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

பெரிய குளத்தை துார் வார கோரி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

பெரிய குளத்தை துார் வார கோரி கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

ADDED : மே 13, 2025 01:36 AM


Google News
கரூர் :வெள்ளியணை, பெரிய குளத்தை துார் வார வேண்டும் என, வெள்ளியணை பஞ்., முன்னாள் உறுப்பினர் அப்புசாமி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது:

கரூர் அருகில் வெள்ளியணையில், 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் உள்ளது. இதில் நீர் நிரம்பினால் போர்வெல், கிணறுகளில் நீர் நிலத்தடி நீர் மட்டம் உயரும். 1976ல் திண்-டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், அழகாபுரி கிராமத்தில், குடகனாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. அதிலிருந்து, 120 கன-அடி தண்ணீர் வரும் வகையில், 55 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக குளம் மற்றும் குடகனாறு அணையில் இருந்து வரும் கால்வாய் துார் வாரப்படாமல் இருக்கிறது.

குளத்தில் தண்ணீர் வறண்டு போனதால், நேரடியாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. குளத்தை நேரில் பார்வையிட்டு, துார்வார ஏற்பா-டுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்-டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us