Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அமராவதி ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பைகள்

அமராவதி ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பைகள்

அமராவதி ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பைகள்

அமராவதி ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பைகள்

ADDED : ஜன 28, 2024 10:55 AM


Google News
கரூர்: அமராவதி ஆற்றில், சிமென்ட் பிளாஸ்டிக் பைகள் அலசுவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்துக்கு விவசாய பணிகள் மற்றும் குடி நீருக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து செல்லும், 17 கிளை வாய்க்கால்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது.

மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன்

பகுதிகளில் உள்ள, 70 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது.

தற்போது, கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி நிறைவு பெற்றுள்ள நிலையில்,

அமராவதி அணையில் இருந்து ஆற்றில், திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு கடந்த, இரண்டு நாட்களாக வினாடிக்கு, 1,000 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளையொட்டி, கரூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் குப்பை, ஆண்டாங்கோவில்,

செல்லாண்டிப்பாளையம்

கிராமப் பகுதிகளில் இருந்து, சாயக்கழிவு, அமராவதி ஆற்றில் அதிகளவில் கலக்கிறது. மேலும், பழைய சிமென்ட் பிளாஸ்டிக் பைகளை, அமராவதி ஆற்றில் அலசுவது தற்போது தொடங்கி யுள்ளது.

இதனால், அமராவதி ஆற்றில், அதிகளவில் கழிவுகளாக காணப்படுகிறது. குறிப்பாக, சாயக்கழிவு, பிளாஸ்டிக் குப்பை, திருமுக்கூடலுார்

பகுதியில், காவிரியாற்றில் கலந்து மாயனுார் கதவணைக்கு செல்கிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், குடிநீரும் மாசுபடுகிறது.

எனவே, அமராவதி ஆற்றில் சிமென்ட் பிளாஸ்டிக் பைகள் அலசுவதை தடுக்க, கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் அமராவதி வடிநில கோட்ட அதிகாரிகள்

நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us