/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை
காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை
காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை
காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை
ADDED : செப் 13, 2025 01:32 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, காவிரியாற்றில் இருந்து, அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே பழனி முத்து நகர் காவிரியாற்று பகுதியில், 40 வயதுடைய ஆண் சடலம் கிடப்பதாக, அப்பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓ., ரவி, 57, கடந்த, 10ல் போலீசில் புகார் செய்தார்.
வேலாயுதம்பாளையம் போலீசார் ஆண் சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவிரியாற்றில் இறந்து கிடந்தவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என, வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.