/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும், குழியுமான நெடுஞ்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை குண்டும், குழியுமான நெடுஞ்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான நெடுஞ்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான நெடுஞ்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான நெடுஞ்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 24, 2025 01:36 AM
குளித்தலை :குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலை, பல மாவட்டங்களையும், கிராமங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அய்யர்மலை, தோகைமலை, கடவூர், மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சென்னை, துறையூர், சேலம், பெரம்பலுார் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், திண்டுக்கல், மதுரை, துவரங்குறிச்சி பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் பொதுமக்கள், இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், குளித்தலையில் இருந்து அய்யர்மலை வரை செல்லும் சாலை, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை மிகவும் மோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. பொதுமக்கள் நலன் கருதி, சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.