/உள்ளூர் செய்திகள்/கரூர்/தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்
தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்
தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்
தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்
ADDED : ஜூன் 17, 2025 02:01 AM
குளித்தலை, : அய்யர்மலை கோவிலில், ரோப்கார் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை மீதுள்ள கோவிலுக்கு பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், ரோப்கார் வழியாகவும் செல்லலாம். தற்போது கோவிலில் ரோப்கார் (கம்பிவடஊர்தி) சேவை காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் நலன் கருதி நாளை முதல் (18ம் தேதி) காலை 9:00 மணியில் இருந்து மதியம், 2:00 மணி வரை மட்டுமே ரோப்கார் சேவை நடைபெறும்.
இத்தகவலை, அய்யர்மலை ரத்தினகிரீரஸ்வரர் கோவில் செயல் அலுவலர் (பொ) தீபா தெரிவித்துள்ளார்.