/உள்ளூர் செய்திகள்/கரூர்/சீசன் தொடங்கியதால் கரூரில் குவிந்த சப்போட்டாசீசன் தொடங்கியதால் கரூரில் குவிந்த சப்போட்டா
சீசன் தொடங்கியதால் கரூரில் குவிந்த சப்போட்டா
சீசன் தொடங்கியதால் கரூரில் குவிந்த சப்போட்டா
சீசன் தொடங்கியதால் கரூரில் குவிந்த சப்போட்டா
ADDED : ஜூன் 30, 2024 01:33 AM
கரூர், சப்போட்டா பழம் சீசன் தொடங்கிய நிலையில், கரூர் நகரில் விற்பனைக்கு குவிந்துள்ளது.
நாடு முழுவதும் சப்போட்டா பழம் சீசன் தொ டங்கியுள்ளது. கர்நாடகா மாநிலம் குடகுமலை மற்றும் தமிழகத்தில் கொடைக்கானல் பகுதியில், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதை தவிர, தமிழகத்தில் விவசாய தோட்டங்களில் குண்டு சப்போட்டா, வால் சப்போட்டா மற்றும் பால் சப்போட்டா என, மூன்று ரகங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும். தற்போது, சீசன் தொடங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் சந்தையில் இருந்து, கரூருக்கு விற்பனைக்கு சப்போட்டா பழம் வர தொடங்கியுள்ளது. கரூர், வெங்கமேடு உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், கோவை சாலை, திருச்சி சாலை பகுதிகளில் சப்போட்டா பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சப்போட்டா, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறந்த சுவையாக இருப்பதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.