/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வனத்துறை சார்பில் இயற்கை முகாம் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு வனத்துறை சார்பில் இயற்கை முகாம் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு
வனத்துறை சார்பில் இயற்கை முகாம் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு
வனத்துறை சார்பில் இயற்கை முகாம் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு
வனத்துறை சார்பில் இயற்கை முகாம் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : ஜூலை 03, 2025 01:29 AM
கரூர், கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட வனத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் ஒரு நாள், சிறப்பு இயற்கை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இயற்கை முகாம், கடவூர் தேவாங்கு சரணாலயம், பொன்னணி அணை, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் உயிர்ச்சூழல் பண்ணை ஆகிய, மூன்று இடங்களில் நடந்தது. அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 பேர் பங்கேற்றனர்.
முகாமில், இயற்கை வேளாண்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் சண்முகம், வனச்சரக அலுவலர் சிவக்குமார், வனவர் கோபிநாத், பசுமை தோழர் கோபால், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி உள்பட, பலர் பங்கேற்றனர்.