/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 27, 2024 12:55 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பஞ்சாயத்துகளில், ஜல் ஜீவன் குடிநீர் திட்டம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் சரவணபுரத்தில் நடந்தது.
பஞ்சாயத்து தலைவர் ரேவதி தலைமை வகித்தார்.இதில் பஞ்சாயத்துகளில் ஜல் ஜீவன் குடிநீர் திட்டம் மூலம் வார்-டுகளில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்குதல், பொது மக்கள் திறந்த வெளி கழிப்பிடம் பயன்பாடு தவிர்த்து, வீடுகளில் சுகாதார கழிப்பிடம் கட்டுதல் தொடர்பாக விவாதிக்கப்-பட்டது.கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக இளநிலை உதவியாளர் ராஜ மாணிக்கம், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.* கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஆகிய பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் குடிநீர் இணைப்பு வழங்-குதல், பொது சுகாதார வளாகம் பயன்பாடு குறித்து பேசப்பட்-டது.