/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கீழவெளியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கீழவெளியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கீழவெளியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கீழவெளியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கீழவெளியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 13, 2025 01:33 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கீழவெளியூர் சமுதாய மன்றத்தில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், தோகைமலை யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் சந்திரன், பெரியசாமி, அருண்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் நீதிராஜன், தனிதாசில்தார்கள் வெங்கடேசன், மதியழகன் ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர். பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி களை எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். பின்னர், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கல்லடை, புத்துார் பஞ்சாயத்து மக்கள் கலந்து கொண்டனர். மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத் திறனாளிகள் துறை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.