/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளத்தில் மழைநீர் சேமிப்பு கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு குளத்தில் மழைநீர் சேமிப்பு கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு
குளத்தில் மழைநீர் சேமிப்பு கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு
குளத்தில் மழைநீர் சேமிப்பு கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு
குளத்தில் மழைநீர் சேமிப்பு கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு
ADDED : செப் 14, 2025 05:00 AM
கிருஷ்ணராயபுரம்:வயலுார் குளத்தில் மழைநீர் சேமிக்கப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுாரில், மழைநீர் சேமிப்புக்கான பெரிய குளம் உள்ளது. இந்த குளம், 100 ஏக்கர் பரப்பளவில் இருப்பதால், மழை காலங்களில் கிராமப்புறங்களில் இருந்து வரும் மழைநீர், குளத்திற்கு வருகிறது. குளத்தை சுற்றி விளை நிலங்கள், கிணறுகள், பாசன தோட்டங்கள் உள்ளன.
தற்போது மழை பெய்து வருவதால், குளத்திற்கு தண்ணீர் வரத்தா-கிறது. குளத்தில் மழை நீர் தேங்கி வருவதால், சுற்றியுள்ள பகுதி-களில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
வயலுார் குளத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களில், நெல் சாகு-படி பணிகளுக்கு வயல்களில் அவுரி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல் சாகுபடிக்கு, நாற்றங்காலில் நெல் விதைகள் தெளிப்பு பணி நடக்கிறது.