Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வரும் 2026 சட்டசபை தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெறுவோம்: இ.பி.எஸ்.,

வரும் 2026 சட்டசபை தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெறுவோம்: இ.பி.எஸ்.,

வரும் 2026 சட்டசபை தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெறுவோம்: இ.பி.எஸ்.,

வரும் 2026 சட்டசபை தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெறுவோம்: இ.பி.எஸ்.,

ADDED : செப் 28, 2025 08:38 AM


Google News
குளித்தலை : குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட தோகைமலையில், அ.தி.மு.க., சார்பில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் கருணாகரன் தலைமையில் பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., பேசியதாவது:

பஞ்சப்பட்டி குளத்திற்கு, காவிரியில் மழை காலங்களில் உபரியாக கடலுக்கு செல்லும் நீரை பம்பிங் மூலம் கொண்டு வருவதற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டது.

இதேபோல் குளித்தலை அருகே மருதுார்-உமையாள்புரம் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு, அ.தி.மு.க., அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் கதவணை கட்டுவதாக அறிவித்தும், கட்டுமான பணி நடைபெறவில்லை. அடுத்த ஆண்டு அ.தி.மு.க., பொறுப்பேற்றவுடன் இரண்டு திட்டங்களும் உடனே நிறைவேற்றப்படும்.

மேலும் குளித்தலை, தோகைமலை பகுதியிலுள்ள குளங்களுக்கு காவிரியில் இருந்து உபரி நீரை பம்பிங் மூலம் கொண்டு செல்லப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீர் மற்றும் பொதுமக்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு 2026 சட்டசபை தேர்தலில், 210 இடங்களில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். ஆர்.டி. மலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் குளித்தலை நகராட்சி, மருதுார், நங்கவரம் பேரூராட்சி தோகைமலை ஒன்றியங்களில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்பட்டது.இவ்வாறு பேசினார்.

ஒன்றிய செயலர்கள் குளித்தலை கருணாகரன், வக்கீல் இளங்குமரன், ரெங்கசாமி மற்றும் பலர் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us