Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ADDED : செப் 14, 2025 04:56 AM


Google News
கரூர்: உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் பெற விண்ணப்-பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:

வேளாண் பட்டதாரிகளின் படிப்பறிவும், தொழில்நுட்பத் திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து, வேளாண் உற்பத்-தியை உயர்த்த, உழவர் நல சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்

படுகிறது.

இந்த மையம் அமைக்க, 30 சதவீதம் அதாவது, 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இங்கு விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்கப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும்.

நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை வழங்கப்படும். 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். கடன் ஒப்புதல் பெற்-றதும், மானிய உதவிக்காக https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us