/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் பெங்களூரு செல்ல பயணிகள் முண்டியடிப்பு ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் பெங்களூரு செல்ல பயணிகள் முண்டியடிப்பு
ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் பெங்களூரு செல்ல பயணிகள் முண்டியடிப்பு
ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் பெங்களூரு செல்ல பயணிகள் முண்டியடிப்பு
ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் பெங்களூரு செல்ல பயணிகள் முண்டியடிப்பு
ADDED : ஜூன் 18, 2024 11:41 AM
ஓசூர்: தமிழக எல்லையான ஓசூரிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு, தொழில், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதேபோல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பெங்களூருவில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் என தொடர்ந்து, 3 நாட்கள் விடுமுறை வந்ததால், பெங்களூருவில் தங்கி பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர் சென்றனர். இன்று (ஜூன் 18) பணிக்கு திரும்ப வேண்டும். அதற்காக அவர்கள், நேற்று மாலையில் பெங்களூரு திரும்பினர். அதனால், சேலத்திலிருந்து, ஓசூர் வழியாக சென்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் நேற்று மாலை கூட்டம் அதிகமாக இருந்தது. ஓசூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகளுக்கு இருக்கை கிடைக்கவில்லை.
பலர் பஸ்களில்நின்றவாறு பயணம் செய்ய முண்டியத்து ஏறினர். கர்நாடகா மாநில அரசு பஸ்கள் நேற்று ஓசூரிலிருந்து பெங்களூருக்கு பெரிய அளவில் இல்லை. அதனால், தமிழக அரசு பஸ்களை தான் பயணிகள் நம்பியிருந்தனர். அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பெங்களூரு செல்லவும் பயணிகள் முண்டியடித்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் பெங்களூரு திரும்பியதால், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சிப்காட் ஜங்ஷன் முதல், தமிழக எல்லையான ஜூஜூவாடி வரை கடும் போக்கு
வரத்து பாதிப்பு ஏற்பட்டது.