/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூன் 09, 2024 04:32 AM
ஓசூர்: ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை தினமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். சனி, ஞாயிறு விடுமுறைக்காக, கர்நாடகா, ஓசூர் பகுதியிலிருந்து, பலர் சொந்த ஊருக்கு செல்வதால், வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே, சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பது வழக்கம். ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் உயர்மட்ட பாலப்பணியால், அங்கு நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேரண்டப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. அதனால், அப்பகுதியில் சாலை நடுவே பள்ளம் தோண்டி பில்லர் போட்டுள்ளனர். நேற்று அதிக வாகன போக்குவரத்தால், பேரண்டப்பள்ளியிலிருந்து, பத்தலப்பள்ளி வரை, 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. மேலும், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் மீது, லாரி மோதி விபத்துக்குள்ளானது. மேலும், கோபசந்திரத்தில் ஒரு லாரி பேரிங் கட்டாகி சாலையில் நின்றது. இதனால், கோபசந்திரத்திலிருந்து பேரண்டப்பள்ளி வரை போக்குவரத்து பாதித்தது. அதேபோல், கொல்லப்பள்ளி - சுண்டகிரி இடையே தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட பாலம் வேலை நடப்பதால், சூளகிரியிலிருந்து கொல்லப்பள்ளி வரை, நேற்று போக்கு
வரத்து பாதிக்கப்பட்டது.
இப்படி, தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கு போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஹட்கோ, சூளகிரி போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.