/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜூன் 30, 2024 03:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை, பல்வேறு ஹோமங்கள் நடந்தது. வரும் ஜூலை, 12ல், கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதால், காலபைரவ சுவாமி மூலவர் உள்ள அறை மூடப்பட்டு, கோவிலுக்கு அருகில் சிவலிங்கம் மற்றும் உற்சவ காலபைரவர் வைத்து யாகம், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிவலிங்க வடிவில் சிவன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில், ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அதேபோல, கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன்குட்டை தக்சண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.