Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புனித அந்தோணியார் ஆலய 54ம் ஆண்டு தேர் திருவிழா

புனித அந்தோணியார் ஆலய 54ம் ஆண்டு தேர் திருவிழா

புனித அந்தோணியார் ஆலய 54ம் ஆண்டு தேர் திருவிழா

புனித அந்தோணியார் ஆலய 54ம் ஆண்டு தேர் திருவிழா

ADDED : ஜூன் 11, 2024 01:48 PM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேக்குப்பம், புதுவை நகரில், அமைந்துள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயத்தில், 54ம், ஆண்டு தேர் திருவிழா நடந்தது. கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், நாள்தோறும் ஆலய பங்கு தந்தையர்களின், நவநாள் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடந்தது.

விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, தேர் பவனி வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக, சேலம் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் புனித அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை காவேரிப்பட்டணம் பங்குத்தந்தை இருதயநாதன் புனித நீர் தெளித்து துவக்கி வைத்தார். தேர் பவனி, சுண்டம்பட்டி, கந்திக்குப்பம், புதுவை நகர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வந்தது. தேர் மீது பக்தர்கள் உப்பு, மிளகு துாவி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us