Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 137 டன் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதங்களில் 105 பேர் கைது

137 டன் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதங்களில் 105 பேர் கைது

137 டன் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதங்களில் 105 பேர் கைது

137 டன் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதங்களில் 105 பேர் கைது

ADDED : மே 27, 2025 01:56 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியிலுள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ரூபேஸ்குமார் மீனா தலைமை வகித்தார். கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன், சேலம் சரக டி.எஸ்.பி., வடிவேல், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் திலகா, எஸ்.ஐ.,க்கள் கதிரவன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன், வழங்கல் அலுவலர் கீதாராணி மற்றும் மண்டல மேலாளர் தணிகாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த ஜன., முதல், கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 100 வழக்குகள் பதிவு செய்து, 105 பேரை கைது செய்து, 137 டன் ரேஷன் அரிசி, 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட, 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளிலும், ரகசிய தகவல்கள் மூலமும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us