/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம் சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்
ADDED : அக் 09, 2025 01:52 AM
பெத்தநாயக்கன்பாளையம்,சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 11 பேர், பாக்கு காய் அறுக்க கூலி வேலைக்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு, சரக்கு வாகனத்தில் தும்பலுக்கு புறப்பட்டனர். படுவக்காட்டை சேர்ந்த சிதம்பரம், 30, ஓட்டினார்.
இடையப்பட்டி புதுார் அருகே சென்றபோது, சாலையோரம் கட்டப்பட்டிருந்த மாடு திடீரென சாலைக்கு ஓடி வந்தது. உடனே சிதம்பரம், வாகனத்தை நிறுத்தினார்.
ஆனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து சிறிது துாரம் சென்று நின்றது. இதில் டிரைவர் சிதம்பரம், தொழிலாளர்களான, நவீன், 25, மணிகண்டன், 35, காயத்ரி, 27, கார்த்திகேயன், 18, சசிகுமார், 22, ராஜேந்திரன், 50, செந்தில், 49, மூர்த்தி, 46, சஜிதா, 40, மற்றொரு மூர்த்தி, 58, என, 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


