/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காரில் புகையிலை, மது கடத்திய 3 பேர் கைது காரில் புகையிலை, மது கடத்திய 3 பேர் கைது
காரில் புகையிலை, மது கடத்திய 3 பேர் கைது
காரில் புகையிலை, மது கடத்திய 3 பேர் கைது
காரில் புகையிலை, மது கடத்திய 3 பேர் கைது
ADDED : ஜூன் 01, 2025 01:32 AM
ஓசூர், ஓசூர் வழியாக புகையிலை மற்றும் கர்நாடகா மதுபானம் கடத்தி சென்றதாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை, வாகன சோதனை செய்தனர். அப்போது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த டொயோட்டா எட்டியஸ் காரை நிறுத்தி சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடகா மாநில மதுபானங்கள் இருந்தன. காரை ஓட்டி வந்த, சென்னை ராஜா அண்ணாமலை புரம் என்.எஸ்., கார்டன் பகுதியை சேர்ந்த மகேஷ், 51, காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 37, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூருவில் இருந்து, சேலத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. 66,816 ரூபாய் மதிப்புள்ள, 86 கிலோ புகையிலை பொருட்கள், 30 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாதப்பன் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில், கர்நாடகாவில் இருந்து, ஸ்கூட்டரில் புகையிலை பொருட்களை கடத்தி சென்ற, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெல்ராம்பட்டியை சேர்ந்த வேலு, 30, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 3,840 ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார், வேலுவை ஜாமினில் விடுவித்தனர்.