Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ADDED : அக் 15, 2025 01:13 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், எல்.இ.டி., வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின் அவர் பேசுகையில், “வடகிழக்கு பருவமழை காலத்தில், மழைநீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திட, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி பராமரிக்க வேண்டும். முத்தான மழைநீரை முறையாக சேகரிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புணரமைத்து மழை நீரை சேகரித்து, தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம்,” என்றார்.

முன்னதாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, பெங்களூரு சாலை வழியாக ஆர்.சி., கிறிஸ்துவ ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் நித்யானந்தம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us