/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
ADDED : அக் 07, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அடுத்த பன்னப்பள்ளியில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து, எருது விடும் விழாவை நடத்திய பன்னப்பள்ளியை சேர்ந்த வேலன், 34 மற்றும், 4 பேர் உள்பட, 5 பேர் மீது வேப்பனஹள்ளி போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல பர்கூர் அடுத்த நேரலக்கொட்டாயில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடந்ததாக, ஒப்பதவாடி வி.ஏ.ஓ., தமிழரசன் புகார் படி, எருதுவிடும் விழா நடத்திய மல்லேஷ் மற்றும், 4 பேர் உள்பட, 5 பேர் மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.


