/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கேரள இன்ஜினியர்கள் பலி அலுவலர் இருவர் மீது வழக்கு கேரள இன்ஜினியர்கள் பலி அலுவலர் இருவர் மீது வழக்கு
கேரள இன்ஜினியர்கள் பலி அலுவலர் இருவர் மீது வழக்கு
கேரள இன்ஜினியர்கள் பலி அலுவலர் இருவர் மீது வழக்கு
கேரள இன்ஜினியர்கள் பலி அலுவலர் இருவர் மீது வழக்கு
ADDED : அக் 15, 2025 01:38 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் அருகே பைக்கில் சென்ற கேரள இன்ஜினியர்கள் இருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இதுதொடர்பாக, நெடுஞ்சாலை நிறுவனத்தின் அலுவலர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் விஜயராஜ், 29, சயோஜ் கங்கா, 28, இன்ஜினியர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனர்.
தமிழக எல்லையான ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் குறுக்கே தடுப்புகளோ, அறிவிப்புகளோ இல்லாததால், பாலம் பயன்பாட்டில் இருப்பதாக நினைத்து பைக்கில் வந்த இருவரும், தவறி விழுந்து இறந்தனர்.
விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிந்து, சாலை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் லெனின், 52, இன்ஜினியர் ராஜவேல், 51, ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


