/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ துாய்மையே சேவை விழிப்புணர்வு கி.கிரி நகராட்சி ஊழியர்கள் பேரணி துாய்மையே சேவை விழிப்புணர்வு கி.கிரி நகராட்சி ஊழியர்கள் பேரணி
துாய்மையே சேவை விழிப்புணர்வு கி.கிரி நகராட்சி ஊழியர்கள் பேரணி
துாய்மையே சேவை விழிப்புணர்வு கி.கிரி நகராட்சி ஊழியர்கள் பேரணி
துாய்மையே சேவை விழிப்புணர்வு கி.கிரி நகராட்சி ஊழியர்கள் பேரணி
ADDED : செப் 18, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி நகராட்சி ஊழியர்களின் சார்பில், சுகாதாரம் மற்றும் சுத்தம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துாய்மையே சேவை உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க, நகராட்சி அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் உள்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
செப்., 17 முதல் அக்., 2 வரை, 'ஸ்வச்சோத்சவ்' என்ற பெயரில் துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி நேற்று துாய்மையின் அவசியத்தையும், குப்பையை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, காந்தி சிலை, பழையபேட்டை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிருஷ்ணகிரி நகராட்சியில் முடிந்தது.
நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டியராஜன், பணி மேற்பார்வையாளர்கள் வினோத், ஆனந்தராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சீனிவாசலு, மாதேஸ்வரன் மற்றும் அலுலர்கள், துாய்மை பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.