ADDED : மே 27, 2025 02:00 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூரை சேர்ந்தவர் நாராயணன், 68. கடந்த, 24 மாலை சுபேதார்மேடு அருகே, கிருஷ்ணகிரி சாலையில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். பின்னால் வேகமாக வந்த இட்டியோஸ் கார் மோதியதில், படுகாயமடைந்த நாராயணன்
இறந்தார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.


