Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'வளரும்் தொழில்நுட்பங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்'

'வளரும்் தொழில்நுட்பங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்'

'வளரும்் தொழில்நுட்பங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்'

'வளரும்் தொழில்நுட்பங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்'

ADDED : மே 18, 2025 06:10 AM


Google News
பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு பாடத்திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்பட்டாலும், அதற்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசு. தும்பை விட்டு வாலை பிடிப்பது போல, தமிழக அரசு செயல்படக் கூடாது. அவர்களுக்கு இணையாக, மாநில பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதாக சொல்கிறார்கள். பள்ளி கட்டடம் சரியாக இருப்பதால் மட்டும் கல்வி வளராது. மாணவர்களுக்கு மதிய உணவு, லேப்டாப் வழங்கிய திட்டங்கள் போல், புதிய திட்டங்களை வழங்க வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர, வளர அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். ஆனால் இன்று, ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு போராடி வருகின்றனர். தென்பெண்ணையாற்றின் குறுக்கே, வாணிஒட்டில் புதிய அணை கட்டினால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் வளம்பெறும்.

அதன் மூலம், வறட்சியாக காணப்படும் பர்கூரை, காவேரிப்பட்டணம் போல பசுமையாக மாற்ற முடியும். இத்திட்டத்தை என் வாழ்நாளில் எப்படி சாதிக்க முடியும், என்பதை அரசியல் மூலமாக முயற்சித்து வருகிறேன், அது வெற்றி பெறும். அதன் மூலம் தண்ணீர் பஞ்சம் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாறும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us