Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரி மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

கி.கிரி மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

கி.கிரி மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

கி.கிரி மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

ADDED : அக் 18, 2025 01:07 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.

அதிகாரிகள், விவசாயிகள் இடையே நடந்த விவாதம்:

பாலகாந்தி, காவேரிப்பட்டணம்: பாலேகுளி கடைமடை ஏரி மற்றும் ஆனான்குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதில், பட்டா நிலம் உள்ளதாக கூறி சிலர் ஆக்கிரமிப்பு

செய்துள்ளனர்.

கலெக்டர் தினேஷ்குமார்: ஏரிக்கால்வாய், பாசனக்கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கூறி பல இடங்களில் பணி நடக்கிறது. அதன்படி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்படும். இதில், சமரசமில்லை.

செந்தில்குமார், வெள்ளாலப்பட்டி: ஈச்சம்பாடி இடதுபுற கால்வாய் பகுதியை துார்வார நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது நல்ல மழை பெய்துவருகிறது துார்வாரி பராமரிக்க வேண்டும்.

கலெக்டர் தினேஷ்குமார்: தற்போது, சி.எஸ்.ஆர் நிதியில் பல ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அரசும் நிதி ஒதுக்க உள்ளது. எனவே ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமந்தராசு, இட்டிக்கல் அகரம்: மயில்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், வனப்பகுதியில் குள்ள நரிகள் குறைந்துள்ளது. நரிகள் அதிகமானால் மயில்கள் முட்டையை அது தின்றுவிடும். அதிகரித்துள்ள மயில்களால் விவசாய பயிர்கள் நாசமாகிறது. எனவே குள்ளநரிகள் அதிகளவில் வளர்க்க வேண்டும்

மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர்: வனப்பகுதியில்

குள்ளநரிகள் இல்லையென உங்களுக்கு எப்படி தெரியும். உட்காருங்கள், எங்களுக்கு தெரியும்.

ரவீந்தராசு, வண்ணாத்திப்பட்டி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல சொசைட்டிகளில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. கொடமாண்டப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடனும் வழங்குவதில்லை.

கலெக்டர் தினேஷ்குமார்: அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான அளவு யூரியா இருப்பு உள்ளது. எந்தெந்த சொசைட்டியில் யூரியா இல்லையென கூறுங்கள். வேளாண் அதிகாரிகள் உடனடியாக அங்கு யூரியாவை அனுப்பி வைப்பர்.

டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், வேளாண்மை இணை இயக்கனர் காளிமுத்து, தோட்டக்கலை இணை இயக்குநர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us