Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காரில் கஞ்சா மாணவியுடன் நண்பர்கள் கைது

காரில் கஞ்சா மாணவியுடன் நண்பர்கள் கைது

காரில் கஞ்சா மாணவியுடன் நண்பர்கள் கைது

காரில் கஞ்சா மாணவியுடன் நண்பர்கள் கைது

ADDED : அக் 09, 2025 03:04 AM


Google News
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஹிமகிரி லேஅவுட் அருகே, சாலையோரம் நேற்று முன்தினம் மாலை, 'ஹூண்டாய்' கார் நின்றிருந்தது. அவ்வழியாக ரோந்து சென்ற நல்லுார் போலீசார், சந்தேகத்தில், காரில் சோதனை செய்தபோது, 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது.

இதனால், காரில் இருந்த பெங்களூரு ஜெயின் பல்கலை.,யில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படிக்கும், ஓசூர் அலசநத்தம் பிஸ்மில்லா நகரை சேர்ந்த மாணவி ஆர்த்தி, 22, மற்றும் அவருடன் படித்த ஆண் நண்பர்கள், 19 முதல் 26 வயது வரையிலான நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் புகைக்க கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us