ADDED : அக் 08, 2025 01:27 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கால்வேஹள்ளியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 34. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. ரஞ்சித்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
கடந்த மாதம், 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த, 6ல், ஆலப்பட்டி பெட்ரோல் பங்க் பின்புறமாக இறந்து கிடந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அவரின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


