Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ.14.10 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு

ரூ.14.10 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு

ரூ.14.10 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு

ரூ.14.10 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு

ADDED : ஜன 01, 2024 11:15 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 14.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை அசோக்குமார்

எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்தனப்பள்ளியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 3.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், மெயின் ரோடு முதல் பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை, 2.30 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் கட்டிகானப்பள்ளி பஞ்., நாராயணன் கொட்டாயில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், திருவள்ளுவர் நகரில், 4.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம், 14.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரமேஷ்குமார், பெத்தனப்பள்ளி பஞ்., தலைவர் குமார், கிளை செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us