/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
ADDED : செப் 18, 2025 01:20 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டிற்கான பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக நாள் விழா
நடந்தது.
பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் செயலாளர் மலர், அறங்காவலர் சசிரேகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இயக்குனர் சுதாகரன், இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்பிரமணியன், மாணவர் சேர்க்கை இயக்குனர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினர்.
இயந்திரவியல் துறைத்தலைவர் ராஜசேகரன் வரவேற்றார்.பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்து பேசும் போது, “தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் இணைந்து நிறுவிய, டான்காம் என்ற, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையத்தின் கீழ், மாநிலத்திலுள்ள, 456 கல்லுாரிகளில், பி.எம்.சி., டெக் கல்லுாரி உட்பட, 5 கல்லுாரிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
புதுச்சேரி சுய முன்னேற்ற பேச்சாளர் மற்றும் தலைமை பண்பு பயிற்றுனர் சரத்குருபாத், ஓசூர் ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி, முன்னாள் தலைவர் ஞானசேகரன், இந்திய இன்ஜினியரிங் அமைப்பு ஓசூர் மைய தலைவர் ராமலிங்கம்
உட்பட பலர் பேசினர். பேராசிரியை சசிகலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை, கல்லுாரி மக்கள் தொடர்பு அலுவலர்
விஜயகுமார் செய்திருந்தார்.